மா, பலாப்பழங்களின் ஆதிக்கம்: வாழைப்பழ வியாபாரம்  வீழ்ச்சி!

Saturday, June 9th, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மாம்பழம் மற்றும் பலாப்பழங்களின் ஆதிக்கத்தால் வாழைப்பழ விற்பனை வழமையைவிட வீழ்ச்சியடைந்துள்ளது என்று வாழைச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றின் பருவகாலம் தற்போது ஆரம்பித்த நிலையில் இவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளன.

தற்போதைய கடும் காற்றுக்கு வாழைகள் முறிவதால் கூடுதலான வாழைக்குலைகள் சந்தைக்கு வந்து சேர்கின்றன.

இந்நிலையில் மாம்பழம், பலாப்பழம் வருகையால் அவற்றின் விற்பனை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக நீர்வேலி வாழைக்குலைகள் தினம் பெரும் எண்ணிக்கையில் வந்துசேர்கின்றன. போதிய சந்தை வாய்ப்பு கிடைக்காததால் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கதலிப்பழம் கிலோ 20 ரூபாவாகவும் இதரை கிலோ 30 ரூபாவாகவும் விற்கப்படுகின்றன. தெற்கில் இருந்தும் போதிய வியாபாரிகள் வராததால் ஏற்றுமதி நடவடிக்கையும் குறைந்து காணப்படுவதாகச் செய்கையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

Related posts: