இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட விசேட தீர்மான மனுக்கள் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே சட்டமா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொருளாதார நிபுணர்கள் 72 ஆண்டுகளாக நாட்டின் நாணயத்தை அழித்துவருகின்றனர் - பதவி விலகிய லிற்றோ நிறுவன த...
தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை - அமைச்சர் மனுஷ நாணய...
ஏப்ரல் 21 தாக்குதல் - மேலதிக தகவல்கள் இருப்பின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பியுங்கள் - ...