மரண  தண்டணைக் கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் ஒருவருக்கான சிறைக்கூடத்தில் 6 பேர் அடைப்பு!

Thursday, October 13th, 2016

மரண தண்டணை பெறும் கைதிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால் அவர்களுக்கான சிறைக்கூடங்கள் நிரம்பி வழிவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை சாவுத்தண்டணை உறுதிப்படுத்தப்பட்ட 330 கைதிகளும் அந்தத் தண்டணைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள 1.064 கைதிகளும் வெலிக்கடை, மஹர மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நெரிசலால் சாதரணமான ஒரு கைதி மாத்திரமே அடைக்கப்பட வேண்டிய கூடத்தில் 5 அல்லது 6 கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த நிலை மேலும் மோசமாகாலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஆயுள் தண்டனைக் கைதிகள் 447 பேரும் மேன்முறையீடு செய்துள்ள 100 பேரும் நெரிசலான சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

judge

Related posts: