பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு ஆகக்கூடுலான விலை !

Monday, October 14th, 2019


பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு வரலாற்றிலேயே ஆகக்கூடுலான விலை கிடைத்துள்ளது. ஒரு கிலோவுக்காக 150 ரூபா ஆகக்கூடிய விலை இம்முறை உற்பத்தியாளர்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதி தடைசெய்யப்பட்டமையும் இதற்குக் காரணமாகும். ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான உற்பத்திச் செலவு 50 ரூபாவுக்கும் 52 ரூபாவுக்கும் இடைப்பட்டதாக அமைந்திருந்தது என்று மாத்தளை விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.பி.கே. தொடன்வல தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இம்முறை ஆகக்கூடிய வருமானத்தை பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த வருடத்தில் 1200 ஹெக்டயர் வரை பெரியவெங்காய செய்கையை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்திற்கு மேலதிமாக மகாவலி பிரதேசத்திலும், அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அதிக விலையில் விற்பனை செய்தோர் மீது கிளிநொச்சியில் நடவடிக்கை - சோதனை நடவடிக்கை தொடரும் என்கிறது விலை...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - நாடாளுமன்ற பிரதி பொதுச் செயல...
மின் கட்டணத்தை நினைத்தவுடன் இனைத்தவாறு அதிகரிக்க முடியாது - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவி...