இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பது தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை பரிசோதனை குழு நடவடிக்கை!

Monday, August 30th, 2021

இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதனை கண்டறிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை ஒருவாராத்தில் வெளியிடப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை டெல்டா வைரஸ் திரிபு நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் 100 சதவீதம் டெல்டா வைரஸ் திரிபு பரவியுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனம் தெரிவித்திருந்திருந்தது.

மேலும், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கின்றப்போது இது சுப்பர் டெல்டா வைரஸ் திரிபாக இருக்கலாம் என பல ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதனை கண்டறிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: