போராட்டத்திற்கு தயாராகும் மருத்துவ உதவியாளர்கள்!
Wednesday, August 10th, 2016
10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ உதவியாளர் சங்கத்தினர் நாளையதினம், சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
தமது 10 கோரிக்கைகளுக்கும் உடனடி தீர்வை அமைச்சு பெற்றுத்தரவேண்டும் என கோரி நாளை பகல் 12 மணி தொடக்கம் ஒரு மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது சேவையினை நிரந்தரமாக்குதல், தமது சேவைக்கேற்ற தகுந்த வேதனத்தை வழங்குதல், தமது கடமை நேரத்திற்கு பிறகு தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய அனுமதித்தல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தமது ஆர்ப்பாட்டத்திற்கு தகுந்த பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் வாரங்களில் தமது போராட்டம் தீவிரமடையும் என மருத்துவ உதவியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் திவிரம்!
6 பாடசாலை மாணவர்கள் கைது!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நி...
|
|
|


