வடக்கு மக்களுக்கும் வறட்சி நிவாரணம்!

Wednesday, August 23rd, 2017

நாட்டின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் 150 கோடி ரூபாவை   ஒதுக்கீடு செய்துள்ளது.

திறைசேரி விங்கியுள்ள 150 கோடி ரூபாய் நிதி முகாமைத்துவ அமைச்சின் ஊடாக மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. இதில் 143 கோடி ரூபாய் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ் புத்தளம், குருநாகல், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மக்களுக்கு உலர் உணவு விவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பதுளை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, மன்னார் மாவட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் கெப்பத்திகொல்லாவ பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது விடுத்த பணிப்புரைக்கமைய, உலர் உணவு நிவாரணம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது,

Related posts: