யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் திவிரம்!

Wednesday, February 1st, 2017

யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் பாதுகாப்புபடை இத்திட்டத்தில் 51, 52 மற்றும் 55 வது படைப்பிரிவின் அதிகாரிகள் உட்பட 1000 க்கும் அதிகமான இராணுவ வீர்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்திலுள்ள 143 கிராமப்புற பாடசாலைகளை உள்ளடக்கும் வகையில் ஜனவரி 14ம் திகதி முதல் 22ம் திகதிவரை இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

இப்பிரதேசங்களில் டெங்கு நோய் பரவுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் அரச மற்றும் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் இராணுவத்தினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நல்லூர், தென்மராட்சி, வடமாராட்சி கிழக்கு, வடமாராட்சி வடக்கு, வடமாராட்சி தென் மேற்கு, வெலிகாமம் கிழக்கு, வெலிகாமம் தெற்கு, மற்றும் வெலிகாமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலை களின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், ஆகியோரின் உதவியுடன் இராணுவத்தினர் இதனை மேற்கொண்டனர். ஜனவரி மாதம் 7ம் 8ம் திகதிகளில் 67 பாடசாலைகளை உள்ளடக்கிய இவ்வாறான நிகழ்வொன்று யாழ் பாதுகாப்பு படைதலைமையக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 15-1350283147-dengu-fever600

Related posts: