காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 31st, 2022

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் பாதுகாப்பு கமரா காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடியோ காட்சிகள் மூலம் வளாகத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அடையாளம் காணும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போராட்டம் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வங்கி கணக்குகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பல குழுக்களினால் ஜனாதிபதி செயலகம் உட்பட அடையாளம் காணப்பட்ட இடங்களில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: