பொது விடுதிகளில் தங்கி பணிபுரிவோர் அதுகுறித்து நிறுவனத்தின் பிரதானியிடம் அறிக்கவும் – இராணுவத்தளபதி !!

Wednesday, October 14th, 2020

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொது விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருபவர்கள் அதுகுறித்து தமது நிறுவனத்தின் பிரதானியிடம் அறிவிக்க வேண்டியது அவசியமென இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியில் இதுவும் ஒன்றென அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 45 சதவீதமானோர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் இருந்து நேற்றைய தினத்தில் மாத்திரம் 194 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: