எளிமையாக உடை அணியுங்கள் – மருத்துவர்கள் அறிவுறுத்து!

Tuesday, April 4th, 2023

சூரியனின் வெப்பம் அதிகரித்துள்ள இந்த நாட்களில் அதிகப்படியான நீரிழப்பு காரணமாக, மருத்துவர்கள் எளிமையான ஆடைகளை அணிய அறிவுறுத்தியுள்ளனர்.

BIG FOCUS திட்டத்தில் இணைந்துகொண்ட கொழும்பு Lady Ridgway மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, வெளிநாடுகளில் இருக்கும் அதே உடை கலாச்சாரத்தை இலங்கைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

நாட்டில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுகிறது. ஆகவே குறைந்த பட்ச சூரிய ஒளியை உறிஞ்சும் வகையில் ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் கோடையில் அப்படித்தான் செய்கிறார்கள்.

நாங்களும் நம் குழந்தைகளுக்கு எளிய உடைகளை அணியச் சொல்கிறோம். டை அணிபவர்கள் டை அணியாமல் எளிய உடை அணியச் சொல்கிறோம் .பாடசாலைக்கு எளிமையான உடை அணியா வேண்டும். சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் எளிமையான உடை மற்றும் தொப்பி அணியலாம்.

மேலும் நீரிழப்பை ஈடுகட்ட குழந்தையின் எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் கொடுக்க வேண்டும். அதேவேளை அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் பருமன் குறையும் என தற்போது நிலவும் கருத்தியல்களில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள மக்களுக்கு எம்மாலான உதவிகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன் - ஈ.பி.டி.ப...
பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக 2 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் - ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச...
2023 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!