பெரும்பான்மை மக்களுடன் தமிழ் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழவேண்டியதொரு காலக்கட்டம் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்!

Saturday, November 26th, 2016

இறந்த எமது உறவுகளை நினைவு கூருவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்

‘எமது பெற்றோர்கள் இறந்தால் நாங்கள் திவசம் வைப்போம். ஒவ்வொரு வருடமும் இதனை மேற்கொள்வோம். அதேபோல் இறைவனை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செய்யலாம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த காலப்பகுதியில் மாவீரர் என்ற பெயரை பாவித்து அஞ்சலி செய்வது பொருத்தமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்ளவேண்டும்’; என்றார்.

நாட்டின் தற்போது நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.. நாட்டில் தற்போது தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்றுபட்டு நல்லிணக்கத்துடன் வாழவேண்டியதொரு காலக்கட்டம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

e28b8f34da6129ea97045d2cd3b53642_XL

Related posts: