பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு!
Sunday, August 21st, 2016
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான செஸ் வரி 25 ரூபாவிலிருந்து 40 ரூபாவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் புதிய செஸ் வரித் திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறக்கமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் உள்நாட்டில்உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கு அமைய இறக்குமதி செய்யப்படும்பெரிய வெங்காயத்திற்கான செஸ் வரியை அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் பல தடவைகள் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரம்-3 அதிபர்களுக்கு ஜனவரியில் பாடசாலை - ஜோசப் ஸ்ராலின் தெரிவிப்பு!
வெளிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் - இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி!
ஊடக பேச்சாளருக்கு பதவி உயர்வு!
|
|
|


