தரம்-3 அதிபர்களுக்கு ஜனவரியில் பாடசாலை – ஜோசப் ஸ்ராலின் தெரிவிப்பு!

Tuesday, December 20th, 2016

தரம்-3 வகையிலுள்ள புதிய அதிபர்களுக்கு எதிர்வரும் 2ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் இரவீந்திரன் உறுதியளித்துள்ளதாக ஆசிரியர் சங்கச் செயலார் தெரிவித்துள்ளார்.

புதிய அதிபர்கள் நியமனம் தொடர்பில் யாழ்.நகரத் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ராலின் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தரம்-3 தராதரமுடைய புதிய அதிபர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை பொறுப்புக்கள் வழங்காவிட்டால் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக இன்று (நேற்று) முடிவெடுக்கப்பட்டது. இன்றுவரை குறித்த அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்பட்டவில்லை. எனவே இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட்பபட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் இரவீந்திரன் எதிர்வரும் 2ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

சந்திப்பில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட அதிபர்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட 78 நியமனங்களையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் நியமங்கள் எங்களின் வலயங்களுக்கு முதலில் வழங்கப்படவேண்டும். அதன் பின்னரே மற்றைய பிரதேசங்கள் தொடர்பில் ஆராயப்ப்ட வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருடன் ஓரிரு நாட்களில் சந்திப்பு ஒன்றையும் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது என்றார்.

ceylonteachersunion

Related posts:

வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுங்கள் - முச்சக்கர வண்டி சாரதிகளிடம...
நாட்டின் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜ...
இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை - நியூசிலாந்து சபாநாயகர்களுக்கிடையில் விசேட கலந்து...