பெப்ரல் அமைப்பினால் சபாநாயகருக்கு கோரிக்கை!
Wednesday, June 13th, 2018
எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றி மக்களுக்கு தமது மாகாண சபை பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கடிதம் ஒன்றின் ஊடாக சபாநாயகரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற நாடாளுமன்றம் தவறியுள்ளதாகவும் பிரதமர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டமை ஊடாக குறித்த எல்லை நிர்ணயம் மீளாய்வுக்கு உட்படுத்தி நிறைவேற்றப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
Related posts:
பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கக் கூடாது!
இலங்கைச் சிறையில் இந்திய மீனவர்கள்!
புலமைப்பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|
|


