பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கக் கூடாது!

Sunday, November 27th, 2016

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் யோசனை அமுல்படுத்தப்பட்டால், இலங்கை பொலிஸ் திணைக்களம் ஒன்பது துண்டுகளாக பிரிந்து முழு பொலிஸ் துறையும் ஆபத்தான நிலைமைக்கு உள்ளாகும் என தேசப்பற்றுள்ள அமைப்புகள் எனக் கூறிக்கொள்ளும் சிங்கள அமைப்புகள் அரசாங்கத்திடம் கூறியுள்ளனர்.

பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால், குற்றப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆகியன நிலை குலைந்து போகும் எனவும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

வடமாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு மாத்திரமல்லாது புலனாய்வுப் பிரிவினர் பலாலி விமான நிலையத்திற்கு வெளியில் சென்று விசாரணை நடத்தப்படுவது தவிர்க்கப்படும் எனவும் அந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால், வடக்கு முதலமைச்சரின் அனுமதியின்றி பொலிஸாருக்கு வடக்கிற்கு செல்ல முடியாது.

இதற்கு முன்னர் மேல்மாகாண முதலமைச்சராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவி வகித்த காலத்தில் அவர் பொலிஸ் அதிகாரங்களை கோரிய போது அன்றைய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க அதனை வழங்க மறுத்ததாகவும் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

827710614Police_2

Related posts: