அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Monday, August 8th, 2022

அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அதிபர் இதன்போது தெரிவித்தார்.

அதனால்தான் தற்போது சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கு ஆதரவளிக்காத அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல தேரர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் அது குறித்து அவரிடம் பேசியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வேண்டும் என பேசும் போராட்டக்காரர்களை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போராட்டத்தினால் நல்லவை மட்டுமல்ல தீமையும் நடந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லதை மட்டும் வைத்துவிட்டு, கெட்டதைப் புறக்கணிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், சட்ட அமுலாக்கத்தில் குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாடி தீர்வை காண்போம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வவுனியா நகரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக சி.சி.ரி.வி. கமெராக்கள் 2 மில்லியன் ரூபா செலவில் பொருத்...
புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாரா...
அரச சேவையை வினைத்திறனாகவும் பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்வதற்கும் உப ...