வவுனியா நகரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக சி.சி.ரி.வி. கமெராக்கள் 2 மில்லியன் ரூபா செலவில் பொருத்தப்படும்!

Sunday, December 17th, 2017

வவுனியா நகரப்பகுதியில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் நகரின் முக்கிய பகுதிகளில் அதிவிசேட சி.சி.ரி.வி. கமெரா பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழிநடத்தலில் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகரின் முக்கிய பகுதிகளில் சி.சி.ரி.வி. கமெராக்கள் பொருத்தப்படுவதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட போது, இந்த நடவடிக்கைக்கு இரண்டு மில்லியன் ரூபா தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நகரின் முக்கிய வர்த்தகர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்காக நேற்று முதல் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசேட நடவடிக்கையினால் நகரில் இடம்பெறும் குற்றச்செயல்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் போன்றவற்றை தடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்குமென்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,இந்த நடவடிக்கைகளை வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அலுவலகம் தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: