இலங்கை – உக்ரேன் அரசாங்கங்களுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஆணையகம்!
Saturday, May 12th, 2018
இலங்கை மற்றும் உக்ரேன் அரசாங்கங்களுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ஆணையகம் ஒன்றை உக்ரேன் ஸ்தாபிப்பதற்கு அந்நாட்டு அமைச்சரவையின் அனுமதிகிடைத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே குறித்த திட்டத்தின் நகல் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பங்கு கொள்ளும் உக்ரேன் பிரதிநிதிகள் குழுவிற்கான அனுமதி கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோவினால் (Petro Poroshenko) வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகளுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மக்களது அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வா...
புதிய நியமனங்கள் அனைத்தும் இரத்து!
நோயாளர்களுக்கான படகு சேவை வேண்டும் - இரணைதீவு மக்கள் கோரிக்கை!
|
|
|


