புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பவ்ரல் அமைப்பு கருத்தறிவு!

Thursday, November 17th, 2016

புதிய தேர்தல் முறைமையை மெருகேற்றும் வகையிலான செயற்பாட்டினை தேர்தலை கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் முன்னெடுத்துள்ளது. இதன் பிரகாரம் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழு தேர்தல் முறைமை தொடர்பில் முன்வைத்த விதந்துரைக்கும் தமது அமைப்பினால் இந்த குழுவுக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையினை மாவட்டம் தோறும் சிவில் அமைப்புக்களுடன் பாசீலித்து அந்த அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாக பவ்ரல் அமைப்பு பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட சிவில் அமைப்பு பிரதிநிதிகளை நல்லூர் யூரோவில் மண்டபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் மக்கள் கருத்தறியும் குழு முன்வைத்த தேர்தல் தொடர்பிலான விதந்துரைப்புக்கும் மாவட்டம் தோறும் அக்குழுவுக்கு மக்கள் முன்வைத்த கருத்து மற்றும் பவ்ரல்; முன்வைத்த அறிக்கை குறித்து அலசி ஆராயப்பட்டது. இதன் அடிப்படையில் தாயாரிக்கப்படும் தேர்தல் முறைமையை மெருகேற்றும் அறிக்கையை மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரியூடாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது என பவ்ரல் அமைப்பினர் தெரிவித்தனர்.

pafral-

Related posts: