கடினமான சீர்திருத்தங்கள் நிலையான பொருளாதாரத்திற்கு அவசியமான விடயங்களாகும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Sunday, July 23rd, 2023

நாட்டில் நிதி ஒழுக்கத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரைவான மற்றும் கடினமான சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் நிலையான பொருளாதாரத்திற்கு அவசியமான விடயமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு இறப்பர் வர்த்தகர் சங்கத்தின் 104 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்..

தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் மாற்றியமைக்கப் போவதில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிப்படைத்தன்மையை உருவாக்க ஊழல் ஒழிப்புச் சட்டம், மத்திய வங்கி சுதந்திரமான முடிவுகளை எடுப்பதற்காக புதிய மத்திய வங்கிச் சட்டம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

இதனூடாக பொருளாதாரம் மிகவும் நம்பகமான திசையில் நகர்ந்து செல்கின்றமை உறுதியாகிறது.

இதன் விளைவாக எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் இலங்கை 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை அடையும் எனவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது - மருத்துவ விநியோகப்...
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை - மாவட்ட சுகாதார வைத்திய பணிப்பாள...
தொடரும் சீரற்ற வானிலை - பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய...