குருதி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு உதவுங்கள் – சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகம் பொது அமைப்புகளிடம் கோரிக்கை!

Thursday, November 3rd, 2016

சாவகச்சேரி வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புக்களிடம் உதவி கோரியுள்ளது வைத்தியசாலை நிர்வாகம் இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் உள்ளதாவது:

சிறுநீரக நோயாளர்களுக்கு அடிக்கடி குருதி சுத்திகரிப்பு மேற்கொள்ள வேண்டும். வடக்கு மாகாணத்தில் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றிலேயே இந்தப் பணிகள் தற்போது நடைபெறுகின்றது. சிறுநீரக நோயால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோர் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதால் அநியாய உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக தெல்லிப்பழை, மந்திகை, சாவகச்சேரி ஆகிய ஆதார வைத்தியசாலைகளில் குருதி சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க நடுவண் சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்போது பொலிஸாரின் பாவனையில் உள்ள கட்டடத்தை குருதி சுத்திகரிப்பு நிலையமாக மாற்றி 3 கட்டில்கள் வைத்து தினமும் குருதி சுத்திகரிப்புப் பணிகளைச் செய்வதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்டடத்தை சீரமைக்க பெருமளவு நிதி தேவைப்படுகின்றது. தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகள், நலன் விரும்பிகள் நிதியுதவி வழங்கி கட்டடத்தின் சீரமைப்பு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டால் தினமும் பெருமளவு நோயாளர்களுக்கு குருதி சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். அடிக்கடி குருதிச் சுத்திகரிப்பு செய்யவேண்டியிருப்பதால், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு சென்று வருவதில் சிறுநீரக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். தென்மராட்சி பிரதேச நோயாளர்களுக்கு இவ்வாநான சேவையை வழங்கக்கூடிய சந்தர்ப்பம் சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கிடைத்துள்ளது. பிரதேச பொது அமைப்புகள், நலன் விரும்பிகள் ஒத்துழைப்பு நல்கினால் பல நோயாளர்களுக்கு உதவ முடியும் – என்றுள்ளது

280px-ABO_donation_path

Related posts: