இலங்கை இன்னும் உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை- ஐ.நா.சபை!

Thursday, December 8th, 2016
இலங்கையில் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் குறித்துவிசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கையில் வெள்ளை வான் கடத்தல்கள், மக்கள் காணாமல் போதல், சிறைகளில் மரணம், சிறைச்சாலைகளின் மோசமான பராமரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு குரல் கொடுத்துள்ளது.

எனவே இந்த விடயங்களுக்கு உரிய தீர்வை தாம் எதிர்பார்ப்பதாக குழுவின் உறுப்பினர்பெலிஸ் ஜியர் நேற்று ஜெனீவாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதுகோரியுள்ளார்.

திருகோணமலையில் 5 மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை மற்றும் எக்சன் பெய்ம்நிறுவனத்தின் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை உட்பட்ட சம்பவங்களின் விசாரணைகளுக்குஎன்ன நடந்தது என்றும் ஜியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையை கண்டறியும் குழு போன்ற, தாம்உறுதியளித்த விடயங்களில் இலங்கை அரசாங்கம் இன்னும் முன்னெடுப்புக்களைமேற்கொள்ளவில்லை என்று ஜியர் குற்றம் சுமத்தியுள்ளார்.

UN1

Related posts: