வடக்கில் 21 பிரதேசங்களில் மருத்துவவிடுதிகள்!

Friday, November 10th, 2017

வடக்கு மாகாணத்தில் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் 21 பிரதேசங்களில் மருத்துவர்கள், தாதியர்களுக்கான விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்குமாகாண சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடக்கு மாகாணத்தில் தற்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் தாதியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் தற்போது பணிபுரியும் தாதியர்கள், மருத்துவர்கள் உட்பட மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தங்கி நின்று சேவையைச் சிறப்பாக வழங்குவதற்கு அவர்களுக்கான புதியவிடுதிகள் அமைத்துள்ளோம்.

அத்துடன் விடுதிகளைச் சீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பு வருடத்தில் வடக்கு  மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6, வவுனியா மாவட்டத்தில் 4, மன்னார் மாவட்டத்தில் 4, கிளிநொச்சி மாவட்டத்’தில் 5, முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு சீரமைப்பு வேலைகளும் நடைபெற்றுள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: