புதிய சட்டதிட்டங்களால் வாகன விற்பனையில் சரிவு!

Tuesday, January 31st, 2017

வாகன இறக்கமதிக்கு அரசு அண்மையில் விதித்திருக்கும் புதிய சட்ட திட்டங்களால் அவற்றின்  விற்பனை 40 சதவீதம் குறைந்திருப்பதாகவும், அதனால் வாகன விற்பனையாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.

அதிகரித்த தீர்வை மற்றும் வரிகள் காரணமாக வாகனங்களின் விலைகள் மிகவும் உயர்ந்திருப்பதால் அவற்றை விற்க முடியாமல் இருப்பதாகவும், ஒரு சில வாகனக் காட்சிக் கூடங்களில் ஒரு வாகனமேனும் விற்கப்படவில்லை எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிறப்பாக 2017 வரவு-செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட புதிய வாகனக் குத்தகை நிபந்தனைகளே வாகன விற்பனையை பெரிதும் பாதித்திருப்பதாகவும், இந்த ரீதியில் சென்றால் தங்களது எதிர்காலம் மேலும் மோசமடையும் எனவும் சங்கத்தின் பேச்சாளர் கவலை தெரிவித்துள்ளார்.

motor1

Related posts: