புகைவண்டி மோதியதில் பாடசாலை மாணவி பலி!
Saturday, July 23rd, 2016
காலி, அம்பலாங்கொடை அருகேயுள்ள கரித்தகந்த பிரதேசத்தில் புகைவண்டியால் மோதுண்டு பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில். தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயதான பாடசாலை மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து அம்பலாங்கொடை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதமே குறித்த மாணவியை மோதியுள்ளது. .சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மஹாபொல புலமைப்பரிசில் எதிர்வரும் திங்கட்கிழமை !
முஸ்லிம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவே சஹ்ரானை கைதுசெய்யவில்லை - முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கரு...
ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் – பிரதமர் ரணிலுக்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!
|
|
|


