இராணுவத்தால் கைது செய்யப்பட்ட மகன் அமைச்சருடன் : தகவல் வழங்கக்கோரும் தாய்.!

Tuesday, March 7th, 2017

2006ஆம் ஆண்டு இராணுவத்தினர் கைது செய்த தனது மகனின் புகைப்படம் 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கொழும்­பு தின­சரிப் பத்­தி­ரி­கை­யில் வெளியானது. இது குறித்து தற்போது கேட்டால் எது­வும் தெரி­யாது என சுலபமாக கைவிரிக்கின்றார்கள் என காணாமல் ஆக்கப்­பட்ட தனது மக­னைத் தேடும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வருகையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய் ஒருவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

22 வயதுடைய தனது மகனை நல்லூர் அர­ச­டிப் பகு­தி­யில் நிலைகொண்­டி­ருந்த இரா­ணு­வத்­தி­னர் கைது செய்து அழைத்து சென்­ற­னர்.

அதன் பின் எனது மகன் தொடர்­பில் பல இடங்­க­ளில் முறை­யிட்­டேன். நானும் தின­மும் தேடி அலைந்­தேன். மகன் விடுவிக்­கப்­ப­ட­ வில்லை. மகன் இருக்­கும் இடத்­தைக்­கூட படை­யி­னர் தெரி­விக்­க­வில்லை.

இவ்வாறே நாட்கள் கடந்து செல்ல 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெலிக்­க­டைச் சிறைச்சா­லைக்கு அமைச்­ச­ர் இரா­தாகிருஷ்ணன் சென்று கைதிகளுடன் உரையாடினார்.

இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சந்தித்த புகைப்படமானது பத்­தி­ரி­கை­யின் முகப்­பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள ஒரு சில­ரில் எனது மகன் நிற்­ப­தனை நான் கண்­டேன்.

அதை ஆதா­ர­மாக வைத்து பல இடங்­க­ளை­யும் தொடர்பு கொண்­டேன். இன்­று­ வ­ரையில் எனது மக­னைக் காட்டவும் இல்லை, விடு­விக்­க­வும் இல்லை.

சோத­னைச் சாவ­டி­யில் வைத்து கடத்­தப்­பட்டு பூசா தடுப்பு முகா­மில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­கான ஆதா­ரம் உள்ளன. எனது மக­னான அரி­ண­கி­ரி­நா­தன் சுதன் தொடர்­பில் இந்த அரசு பதில் கூற­வேண்­டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், தனது மகன் தொடர்பில் கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ரான இரா­தாகிருஷ்ணன் தக­வல் தெரி­விக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: