முஸ்லிம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவே சஹ்ரானை கைதுசெய்யவில்லை – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கருத்து!

Sunday, September 20th, 2020

அரசியல் தலையீடுகள் காரணமாகவே உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யமுடியவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு தொடர்புபட்ட விவகாரங்களில் அரசியல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 19 ஆம் திகதி இடம்பெற்ற தேசிய புலனாய்வு கூட்டத்தில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்ற பின்னர் நாடு திரும்பியவர்கள் குறித்து ஆராயப்பட்டது எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடுதிரும்பியவர்கள் காரணமாக தேசிய பாதுகாப்புக்கும் மக்களுக்கும் ஆபத்து காணப்பட்டது, பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் காணப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவேண்டிய தேவை உட்பட அரசியல் காரணங்கள் காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஐந்து அரசியல்வாதிகள் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தியதன் காரணமாக ஏற்பட்ட பிளவு காரணமாக என்னால தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்த முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: