உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு!
Monday, February 6th, 2017
நாட்டில் அண்மையில் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட உணவுப்பொதி ஒன்றின் விலை மேலும் 10 அல்லது 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையே உணவுப்பொதிகளின் விலையும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் தற்போது தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, தேங்காய் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உணவுப் பொதியொன்றினை, 50 ரூபாவுக்கு வழங்க முடியாத நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி!
கடந்த வருடத்தில் 300 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறைச்சாலையில் - சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்க...
வலிகளை விட்டுச் சென்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது நினைவு நாள் இன்று – ஆயிரக்கணக்கான உறவுகள் கண்ணீர் சொரி...
|
|
|
சிறுவர் தினத்தின் இலக்கை அடைவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்...
பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19 ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்...
எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூர...


