புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஸ்ரீ.சு.கட்சியின் நிலைப்பாடு அடுத்த வாரம்!

உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அடுத்த வாரம் அரசியலமைப்பு உருவாக்க செயற்குழுவிடம் அறிவிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்ட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் புதிய அரசியல் அமைப்பு குறித்து கலந்துரையாடி கட்சியின் நிலைப்பாடு பற்றி அறிவிக்க உள்ளனர்.
அரசியல் அமைப்பு உருவாக்க செயற்குழு எதிர்வரும் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் கூட உள்ளது.
புதிய அரசியல் அமைப்பு குறித்த கட்சியின் நிலைப்பாடு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்தாலோசித்த பின்னர் இறுதி நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|