புதிய அரசமைப்புக்கு முழுமையான ஆதரவு – சந்திரிகா!

Thursday, November 2nd, 2017

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு இடைக்கால அறிக்கைக்கு முழுமையான ஆதரவு வழங்குகின்றேன் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

புதிய அரசமைப்புத் தொடர்பில் எனது நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்த நாட்டு மக்களுக்கு புதிய அசைமைப்பு ஊடாகத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடி இறப்பின் விளிம்பு வரை சென்றவள் நான்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் முக்கியமானது இந்தப் புதிய அரசமைப்பு. இதுவே சரியான சந்தர்ப்பம். அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – என்றார்.

Related posts:

அரச நிறுவனங்களின் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து – எச்சரிக்கிறது கணனி தயார்...
ஓய்வூதிய பணம் பெறச்சென்ற முதியவர் வங்கியில் மரணம் – சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் சம்பவம்!
இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பஷில் - புதிய அரசியலமைப்பிற்கான மூல வரைபும் ஜனவரி மூன்றாம் வாரத்தில...