பாடசாலை ஒன்றுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்: வெளியான தகவல்!

Saturday, April 3rd, 2021

வெள்ளவத்தையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் புத்தக களஞ்சியம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த புத்தக களஞ்சியத்தில் 15 ஆயிரம் குர்ஆன் பிரதிகள் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடிவடிக்கையில் குறித்த பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்இ இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த புத்தகங்களின் பிரதிகள் சிலவற்றினையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனினும் மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: