பயிற்சியை நிறைவுசெய்து 390 வீரர்கள் வெளியேற்றம்!

Tuesday, September 12th, 2017

இலங்கை கடற்படையின் 229ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 390 வீரர்கள் அடிப்படை பயிற்சியை நிறைவுசெய்து வெளியேறினர் என தெரிவிக்கப்படுகின்றது.

பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நேற்று முன்தினம் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது பொருட்கள் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர அட்மிரல் நிஹால் பிரநான்து பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.229 வது ஆட்சேர்ப்பில் ஆர்.ஆர்.யூ.சி ராஜபக்ஷ சிறந்த பயிட்சியாளருக்கான விருதை பெற்றதுடன், பீ.எம் டில்ஷான் சகல பாடங்களிலும் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெற்றார்.

ஜீ.ஆர்.பி.எம் பன்டார சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் எச்.பி.டி.எல் பிரியதர்ஷன மற்றும் டி.ஜி.எஸ்.எம் ரத்னாயக சிறந்த விளையாட்டு போட்டியாளர்களுக்கான விருதை வென்றனர்.இந்த நிகழ்வில் மகா மகாசங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள், கடற்படை தலைமையகத்தின் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ,பயிற்சி முடித்து வெளியேறும் வீரர்களின் குடும்பத்தினரும் கலந்துக்கொண்டனர்.

Related posts: