2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !
Friday, August 23rd, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தொகுதியை வலுவூட்டுவதற்காக 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
பயணிகளுக்கு மிகவும் வசதியான தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்புகளை விடுத்து விருப்புக்கள் மற்றும் ஆலோசனைகளை கோருவதற்காக போக்குவரத்து அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 1670 மில்லியன் வருவாய்!
இலங்கையில் 4 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு!
புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும்...
|
|
|


