பண்டிகைக் கால சுற்றிவளைப்பில் பல விற்பனை நிலையங்களுக்கு சீல்!

Tuesday, April 17th, 2018

நாடு முழுவதும் பண்டிகைக் காலத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் முறையில் செயற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை களஞ்சியப்படுத்தி இருந்த மற்றும் விற்பனை செய்த 25 விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 512 சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டதாகவும் இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்து 543பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தின் போது பொதுசுகாதார பரிசோதகர்கள் நாடெங்கிலும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிலையங்களை சோதனையிட்டனர்.

இவற்றில் சுப்பர் மார்க்கெட்டுகள், சுற்றுலா ஹோட்ல்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிக்சாலைகள் என்பனவும் உள்ளடங்கும். இவற்றிலிருந்து சுமார் ஒன்றரைக் கோடி ரூபாபெறுமதியான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Related posts: