விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Friday, July 9th, 2021

எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன் ஒருகட்டமாக அதிகுறைந்த விலையில் நூடில்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

50 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு புலமைப்பரிசில்: யாழ். படைத் த...
இலங்கையில் போதை பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது - மேல் மாகாண சிரேஸ்ட பிரத...
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் நாடுங்கள் - கராபிட்டிய வைத்தி...