சிவப்பு சீனியினை இறக்குமதி செய்பவர்களுக்கு சிக்கல்!

Thursday, June 8th, 2017

சீனி கிலோ ஒன்றுக்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் சிவப்பு சீனியினை இறக்குமதி செய்பவர்கள் பாரிய சிக்கலினை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிவப்பு சீனி இறக்குமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

பத்து ரூபாவினால் தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதால் சிவப்பு சீனி கிலோ ஒன்றின் விலை 25 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் பராக்கிரம அபேசேகர தெரிவித்துள்ளார்தீர்வை வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் சிவப்பு சீனியினை விற்பனை செய்யும் போது அதிக விலையினை நிர்ணயிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எனவே குறித்த சிக்கல்களால் சிவப்பு சீனி இறக்குமதியானது நிறுத்தப்படவுள்ளதாகவும், உலக சந்தையில் வெள்ளைச் சீனியின் விலை குறைவடைந்துள்ள போதும் சிகப்பு சீனியின் விலை குறைவடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: