நுரைச்சோலையில் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை!
Thursday, December 22nd, 2016
எதிர்காலத்தில் அனல் மின் உற்பத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு நேரிடும் என மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலவும் வரட்சியான காலநிலையுடன் நீர்மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமையின் கீழ் எரிசக்தி மூலமான மின் உற்பத்திக்காக அதிக செலவீனம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டார். இதேவேளை, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயலிழந்துள்ள முதலாவது மின்பிறப்பாக்க இயந்திரத்தை ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
பேருந்தில் வந்த பெண்ணின் பணத்தை பறித்த இளைஞன் - விரட்டிப் பிடித்தபோதும் அச்சுறுத்தி தப்பியோட்டம்!
பரிசோதனையைத் தவிர்ப்பவர்களி வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை - மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடுமைய...
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தலால் கொரேனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி - இலங்...
|
|
|


