தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தலால் கொரேனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி – இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Monday, September 13th, 2021

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமாயின் மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

அத்துடன் இந்த வருடம் நிறைவடையும் வரையில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்னபற்றி நடக்குமாறும் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இலங்கை வாழ் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டுமென. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்புத்தேகமவில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

இளைய சமுதாயத்தினரின் மத்தியில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் கருவுறுதல் பிரச்சினை ஏற்படும் என்ற சந்தேகம் பரவலாக காணப்படுகின்றமையே இதற்கான காரணம். ஆனால் உலக நாடுகளில் இது தொடர்பில் எவ்வித ஆராய்ச்சியும் உறுதிப்படுத்தவில்லை.

எனவே இலங்கையில் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதது

000

Related posts: