தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன – அரச மருந்தாளர் சங்கம் குற்றச்சாட்டு!

Friday, November 3rd, 2023

NMRA எனப்படும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த ஆவணங்களை அழிப்பதில் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி, விஜித் குணசேகரவின் பங்கு இருப்பதாக, அதன் தலைவர் துஷார ரணதேவ, குற்றம் சுமத்தியுள்ளார்.

தலைமை நிறைவேற்று அதிகாரி, ஆணைக்குழுவுக்கு பிரவேசித்து சில கோப்புகளை அகற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர் விஜித் குணசேகர, அண்மைக் காலமாக தரம் குறைந்த மருந்துகளின் வருகை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: