பரிசோதனையைத் தவிர்ப்பவர்களி வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை – மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடுமையான எச்சரிக்கை!

Sunday, November 29th, 2020

பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களின் வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு ஆஜராக வேண்டாம் என்று நான்கு பேர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்குப் பிரசாரம் செய்து வருவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போது 18 பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 11 கிராம சேவகர் பிரிவுகளும் இதற்குள் அடங்கும். இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகள், கம்பஹா மாவட்டத்தில் 05 பொலிஸ் பிரிவுகள் மற் றும் அடுலுகம பிரதேசத்தில் 09 கிராம சேவை பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மற்றும் அலவத்த பிரதேசத்தில் 02 கிராம சேகவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பல கிராமக சேவகர் பிரிவில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள பொதுச் சுகாதார பிரிவு அறிவித்தல் விடுத்தால் தவிர்க்காமல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.

அத்துடன், 4 பேர் கொண்ட குழு இணையம் மூலம் இந்த செயலை மேற்கொண்டு வருவதாகவும், இது குறித்துச் சிறப்பு விசாரணை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவித்தல் விடுத்து பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களுக்கு எதிராகச் சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்றும், அவர்களின் வீடுகளுக்குச் சீல் வைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

Related posts: