நிலக்கரி கொள்வனவில் மோசடிகளை தடுக்குமாறு கோரிக்கை!

Sunday, January 29th, 2017

இலங்கையின் அனல் மின்சார உற்பத்திக்கான நிலக்கரி கொள்வனவு செய்கின்ற போது உரிய நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2009 ஆம் தொடக்கம் 2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் நுரைச்சோலை லக்விஜய அனல் மின்சார நிலையத்துக்கு கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரியில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காலக்கட்டத்தில் நிலக்கரி கொள்வனவினால் அரசாங்கத்துக்கு 4,145,43 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்தாக கணக்காய்வாளர் நாயகம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் எனவே எதிர்வரும் காலத்தில் கொள்வனவின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் கோரியுள்ளார்.

201604041456316430_Special-court-awards-4-year-jail-term-to-JIPL-directors-R-S_SECVPF

Related posts: