மாணவியைக் காணவில்லை: சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
Thursday, June 9th, 2016
க. பொ. த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை கடந்த-6 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
திங்கட்கிழமை மாலை குறித்த மாணவி மேலதிக வகுப்புக்காகச் சென்று இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இரவு- 11 மணியளவில் பெற்றோர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
துரித கதியில் இடம்பெறும் வடக்கு மாகாணக் கூட்டுறவாளரின் மேதினத்திற்கான ஏற்பாடுகள்
24 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்
தளர்த்தப்பட்டது இரசாயன உர இறக்குமதிக்கான தடை – ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது அதிவிசேட வர்த்த...
|
|
|


