நிதியமைச்சர் சீனா பயணம்!
Saturday, June 25th, 2016
சீன உட்கட்டுமான வசதி முதலீட்டு வங்கியின் முதலாவது வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் ரவி கருணாநாயக்க சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த மாநாடு இன்றும் மற்றும் நாளை நடைபெறவுள்ளது. சீனா ஜனாதிபதியின் எண்ணக்ககருவின் அடிப்படையில் இந்த வங்கி நிறுவப்பட்டது.
ஆசிய பிராந்திய வலய நாடுகளின் நீண்ட கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த வங்கிக் கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி கட்டமைப்பின் ஆரம்ப உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரபல இளம் நடிகர் மரணம்!
தேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வருமானம் 1.3 ட்ரில்லியன் ரூபா!
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரம் கடவுச்சீட்டு விநியோகம் - குடிவரவு மற்றும் குடியகல்வுத் திண...
|
|
|


