நாடாளுமன்றுக்கு ஒரே நாளில் 7,000 மாணவர்கள் வந்தனர்!

Friday, March 25th, 2016

நாடாளுமன்றத்துக்கு ஒரேநாளில் 7 ஆயிரம் மாணவ  மாணவிகள் வருகைதந்தனர் என்று படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 40 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே நாடாளுமன்றத்துக்கு நேற்று வியாழக்கிழமை வருகைதந்திருந்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக, நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள், ஆயிரம் பேரும் வருகைதந்துள்ளனர்.

நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30க்கு கூடி, இரவு 7.30க்கு நிறைவடைந்தது. காலை முதல் இரவு வரையிலும், மக்கள் கலரி நிரம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: