ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்க பல நாள் மீன்பிடிக்கலம் மானிய விலையில்!

Thursday, October 27th, 2016

கடற்றொழிலாளர்கள் கடலில் பல நாட்கள் தங்கியிருந்து தொழில் செய்யும் நோக்கில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சு 55 அடிக்கு மேற்பட்ட நீளம் உடைய கடற்கலத்தை (படகு) மானிய விலையில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளது.

இந்த படகு மானிய விலையில் வழங்கப்படும். நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த கடற்கலம் ஆழ்கடலில் மீனவர்கள் பல நாட்கள் தங்கியிருந்து தொழில் செய்வதற்காக வழங்கப்படவுள்ளது. இதன் விலை 2 கோடியே 60 இலட்சம் ரூபாவுக்கு மேல் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பல நாள் கடற்கலத்திற்கு யாழ்.குடாநாட்டு மீனவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

மானிய விலையில் வழங்கப்படவுள்ளது. இந்த கடற்கலத்திற்க விண்ணப்பிக்கும் மீனவர்கள் தத்தம் பிரதேச கடற்றொழில் பரிசோதகர்களிடம் இதற்கான படிவத்தை பெற்று விண்ணப்பிக்க முடியும். கடற்றொழில் அமைச்சு ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக பெரிய அளவிலான கடற்கலங்களை நவீன வசதிகளைக் கொண்ட பல நாள் கடலில் தங்கி தொழில் செய்யக்கூடிய கலங்களை மீனவர்களுக்கு வழங்கவுள்ளது. இக்கலங்கள் மானிய விலையில் (அரை விலைக்கு) வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைவிட இலங்கை வங்கியும் மீதிப் பணத்தை கடனுக்கு மீனவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

627571767board-abcnet

Related posts: