நல்லூர் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளில் இடம்பெறும்  சிறுகுற்றச்செயல்களைக்   கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இளஞ்செழியன் பணிப்பு!

Monday, August 22nd, 2016

யாழ். நல்லூர்க்   கந்தசுவாமி ஆலயத்தின் அண்டியுள்ள பகுதிகளில் இடம்பெறும்  சிறுகுற்றச் செயல்களைக்  கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கையினை எடுக்குமாறு யாழ். மாவட்டப்  பிரதிப்  பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ குமாரட்ண மற்றும் யாழ். பொலிஸ்  நிலையப்  பொறுப்பதிகாரி ஆகியோர்களுக்கு நேரடியாகவும்,  எழுத்து மூலமாகவும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவித்தலை வழங்கியுள்ளார் என யாழ் மாவட்டப் பிரதிப்  பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்-

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயத்தில் தமிழர்களின் பெருமைகள்  மற்றும் அது தொடர்பான சமய நிகழ்வுக்கு முக்கியத்துவமளிக்கும் இத்தருணத்தில் குற்ற சம்பவங்கள் இடம்பெறமாலிருக்க வேண்டும்.

எனவே ஏராளமான பக்தர்கள் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலுமிருந்து இவ்வாலயத்திற்கு வருகை தரும்  இத்தருணத்தில் அவர்களுக்கான சிறந்ததொரு அங்கீகாரத்தினை நாங்கள் வழங்கவேண்டும். எனவே, வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆலயத்தின் மகிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: