தொலைந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போர் தவறான தகவல்களை வழங்கக்கூடாது – ஆட்களை பதிவு செய்யும் ஆணையாளர் !

Tuesday, July 4th, 2017

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்புகையில் சில விண்ணப்பதாரர்கள் தாம் முன்னர் அடையாள அட்டையினைப் பெற்றிருந்தும் அந்த அடையாள அட்டையின் இலக்கம் தமக்கு தெரியாது என தெரிவித்து முன்னர் பெற்றுக்கொண்ட அடையாள அட்டையிலுள்ள தகவல்களிலிருந்தும் மாறுபட்ட தகவல்களை வழங்கி புதிய இலக்கத்தில அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய அடையாள அட்டைகள் போலியாகத் தயாரிக்கப்படுவதற்க சந்தர்ப்பம் ஏற்படகின்றது என ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணனித் தரவு முறையினுள் 28.02.2014 இற்குப் பின்பு விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைகளின் தகவல்கள் மாத்திரமே சேமித்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதற்க முன்னர் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைகளுக்கான தகவல்களை இம்முறையினூடாக பரீட்சிக்க முடியாதுள்ளது.

இதன்படி 28.02.2014 திகதிக்கு முன்னர் அடையாள அட்டையினைப் பெற்றுக்கொண்ட ஒருவர் தமத அடையான இஅட்டைக்குரிய தகவல்களை மறைத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பராயின் இதற்கு முன்னர் அடையாள அட்டையினைப் பெற்றுக்கொண்டுள்ளனரா என்பது பற்றி பரிட்சீப்பது கடினமானது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமது பயரை மாற்றுவது அல்லது பெயரின் ஒரு பகுதியை நீக்குவது போன்றவற்றைக் காண முடிகிறது.

எனவே இத தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி இவ்வாறன சந்தர்ப்பத்தில் குறித்த விண்ணப்பதாரியினை பிரத்தியேகமாக விசாரித்து முன்னர் பெற்றுக்கொண்ட மடையாள அட்டைக்குரிய அதாரங்கள் இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே புதியஇலக்கத்தில் அடையாள அட்டையினை வழங்கி வழங்குவதற்குரிய சிபார்சினைத் தமக்க அனுப்பி வைக்குமாறு அனைத்து பிரதேச செயலர்களையும் அவர் கேட்டுள்ளார்.

Related posts: