குடாநாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பங்பளிப்பு செய்தோரை கௌரவித்து சான்றிதழ் வழங்கிவைப்பு!

Saturday, December 4th, 2021

கொரோனா வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு தலைமையில் இன்று இடம்பெற்றது.

இன்று மதியம் ஒரு மணியளவில் தல்செவன இராணுவ விடுதியில் குறித்த இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கமகேசன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன், யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா, யாழ். மாவட்ட தொற்று நோய் தொடர்பான வைத்திய நிபுணர் பரணிதரன், சுகாதார பிரிவின் வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், படைப் பிரிவுகளின் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: