புதிய கோணத்தில் பொலிஸ்,காணி அதிகாரங்களை பரிசீலிக்க தயார்.!

Monday, May 30th, 2016

நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில்   பொலிஸ் மற்றும் காணி  அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 6 உப குழுக்களும் ஒரு நிறைவேற்றுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். இந்நிலையில்    அரசியல்தீர்வுத்திட்டத்தில் கூட்டமைப்பின் கருத்துக்களும் உள்வாங்கப்படும்.  தேவை ஏற்படின் கூட்டமைப்புடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்பு  மற்றும் அதில் உள்ளடக்கப்படும் அரசியல்தீர்வு திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  விபரிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்

Related posts: